நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பாலிவுட்டில் தான் நடித்து வந்த சிட்டாடல் என்கிற வெப் தொடரையும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த குஷி என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பையும் நிறைவு செய்தார்.
பொதுவாக படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஆன்மீக சுற்றுலாவோ அல்லது தனது நண்பர்களுடன் வெளிநாட்டு சுற்றுப்பயணமோ கிளம்பி விடுவது சமந்தாவின் வழக்கம்.
அதிலும் அவர் தற்போது படப்பிடிப்பில் இருந்து கிட்டத்தட்ட 6 மாதத்திற்கு ஓய்வு எடுத்துக் கொள்ளப் போகிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தனது நண்பர்களுடன் பாலி தீவிற்கு உற்சாக சுற்றுலா சென்றுள்ள சமந்தா, விடுமுறையை ஜாலியாக என்ஜாய் செய்து வருகிறார். மேலும் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறிப்பாக அவர் புதிதாக வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தனது தலைமுடியை வெட்டி புதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறியுள்ளார். அவரது இந்த ஹேர் ஸ்டைலை பார்த்துவிட்டு நடிகை ஹன்சிகா ‘எப்போதும் போல’ என்று கமெண்ட் அடித்துள்ளார்.