கடந்த சில வருடங்களாகவே வெற்றி படங்களுக்கு இரண்டாம் பாகம் எடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிச்சைக்காரன் 2 திரைப்படம் வெளியானது.

தற்போது விஜய் ஆண்டனி நடித்துள்ள கொலை என்கிற திரைப்படம் வரும் ஜூலை 21ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் விஜய் ஆண்டனியிடம் பிச்சைக்காரன் படம் போன்று கொலை படத்திற்கும் அடுத்தடுத்த பாகங்கள் வருமா என கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி கூறும்போது கொலை’யின் உலகம் இன்னும் பல பாகங்களுடன் விரிவடைவதைக் காண நான் ஆர்வமாக உள்ளேன். எங்கள் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே இந்த யோசனையை தெரிவித்துள்ளனர். விரைவில் இது குறித்து வரும் காலத்தில் அறிவிப்போம்” என்றார்.

கொலை படத்தை இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார். கதாநாயகிகளாக ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.