லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் நடித்து வரும் படம் லியோ. இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது. அது மட்டுமல்ல கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என முன்கூட்டியே ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னொரு பக்கம் இந்த படத்தின் மற்ற மாநில வெளியீட்டு உரிமைகள் வியாபாரமும் ஜரூராக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தெலுங்கு வெளியிட்டு உரிமையை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சிததாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் கைப்பற்றி உள்ளது. இவர்கள்தான் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படத்தை தயாரித்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல மலையாளத்தில் லியோ படத்தை வெளியிடும் உரிமையை பிரபல நிறுவனமான கோகுலம் பிலிம்ஸ் கோபாலன் வாங்கியுள்ளார் என்பதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
தமிழகத்தில் இந்த படத்தை எந்த நிறுவனம் வெளியிடப் போகிறது என்பது இனிவரும் நாட்களில் தெரிந்து விடும்.