V4UMEDIA
HomeNewsKollywoodதம்பியின் வெற்றியால் மகிழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா

தம்பியின் வெற்றியால் மகிழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா

அர்ஜுன் ரெட்டி என்கிற தெலுங்கு திரைப்படம் மூலமாக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா. அந்த படத்தை தொடர்ந்து கீதா கோவிந்தம் என்கிற படத்தில் இடம்பெற்ற அந்த ஒரு பாடல் காரணமாகவே இன்னும் அதிக அளவில் ரசிகர்களிடம் பிரபலமானார்.

இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார். தற்போது சமந்தாவுடன் ஜோடியாக குஷி என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா.

இன்னொரு பக்கம் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டாவும் கடந்த 2018ல் தொரசாணி என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தாலும் குறிப்பிடத்தக்க வெற்றியாக எந்தப் படமும் அமையவில்லை.

இந்த நிலையில் கடந்த வெள்ளி என்று ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் பேபி என்கிற படம் வெளியானது. வைஷாலி என்பவர் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் வெளியான தினத்தில் இருந்து மிகுந்த வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

கிட்டதட்ட ஒரு வாரத்திற்குள் 50 கோடி வசூலை தாண்டி விடும் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தின் பிரிமியர் காட்சியின் போது படத்தைப் பார்த்துவிட்டு விஜய் தேவரகொண்டாவும் அவரது தோழியான நடிகை ராஷ்மிகா மந்தானவும் கண்கலங்கியதாக தெரிவித்தார்கள்.

இந்த நிலையில் தற்போது பாடம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருப்பதால் தம்பியின் வெற்றியைக் கண்டு சந்தோஷத்தில் இருக்கிறார் விஜய் தேவரகொண்டா.

Most Popular

Recent Comments