V4UMEDIA
HomeNewsKollywoodபுராஜெக்ட் கே பிரபாஸ் லுக் வெளியானது

புராஜெக்ட் கே பிரபாஸ் லுக் வெளியானது

பாகுபலி படத்தை தொடர்ந்து பான் இந்தியா நடிகராக மாறிவிட்ட பிரபாஸின் படங்களுக்கு என ஒரு தனி எதிர்பாப்பு உருவாகிவிட்டது. ஆனால் பாகுபலி படத்தை தொடர்ந்து வெளியான அவரது சாஹோ, ராதே ஷ்யாம், சமீபத்தில் வெளியான ஆதிபுருஷ் ஆகிய படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்த தவறின.

இந்த நிலையில் பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக கேஜிஎஃப் இயக்குனர் டைரக்சனில் சலார் மற்றும் நாக் அஸ்வின் இயக்கத்தில் புராஜெக்ட் ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் புராஜெக்ட் கே படம் ஒரு பேண்டஸி படமாக உருவாக இருக்கிறது என்று சொல்லப்பட்டு வந்தது.

சமீபத்தில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதற்காக நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளார். கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இந்த நிலையில் இந்த நிலையில் இந்தப் படத்தில் பிரபாஸின் கதாபாத்திரம் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் போஸ்டர் வெளியான சமயத்தில் அதில் இடம்பெற்ற பிரபாஸின் உருவம் குறித்து சில விமர்சனங்களும் எழுந்தன. தற்போது வெளியாகியுள்ள இந்த புராஜெக்ட் கே படத்தில் பிரபாஸின் போஸ்டர் பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது.

பிக்சன் கதை என்பதால் படத்தில் இதை எப்படி காட்டி இருப்பார்கள் என்பதைப் பொறுத்தே இன்னும் வரவேற்பை பெரும்.

Most Popular

Recent Comments