V4UMEDIA
HomeNewsKollywoodபிரபாஸ்-கமல் நடிக்கும் புராஜெக்ட் கே பட டைட்டில் அறிவிப்பு

பிரபாஸ்-கமல் நடிக்கும் புராஜெக்ட் கே பட டைட்டில் அறிவிப்பு

நடிகர் பிரபாஸின் படங்கள் நாளுக்கு நாள் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் கவனம் பெற்று வருகின்றன. அதே சமயம் அவரது கடந்த சில படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்க தவறியதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் படங்களைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் சலார் திரைப்படம் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதை அடுத்து பிரபாஸ் நடிப்பில் உருவாகும் படம் தான் புராஜெக்ட் கே. தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி என்கிற படத்தை இயக்கிய நாக் அஸ்வின் தான் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் மிக முக்கியமான வில்லன் வேடத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார் என்கிற அறிவிப்பு கலந்து சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதே சமயம் புராஜெக்ட் கே என்று சொல்லப்பட்டு வந்த இந்த படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என ரசிகர்களிடம் ஆர்வம் நிலவி வந்தது.

 அதை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள சாண்டியாகோ நகரில் ஜூலை 21ஆம் தேதி நடைபெறும் திரைப்பட விழாவில் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்று சொல்லப்பட்டது.

 இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘கல்கி 2898 AD’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கல்கி பகவான் அவதாரத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாவதாக இயக்குனர் நாக் அஸ்வின் கூறியுள்ளார்.

நெகட்டிவ் என ஒன்று இருந்தால் தான் பாசிட்டிவ் என்கிற ஒன்று மிகப் பெரிய அளவில் பலம் பெறும். அதனால்தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று கூறியுள்ளார் கமல். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாபச்சன் முக்கிய வேடத்தில் நடிக்க கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.

Most Popular

Recent Comments