இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்ந்துள்ளார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருவதால் முன்னணி ஹீரோக்கள் அனைவரும் இவரது டைரக்ஷனில் நடிக்க விரும்புகின்றனர்.
தற்போது மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய்யை வைத்து லியோ என்கிற படத்தை இயக்கி முடித்து விட்டார் லோகேஷ் கனகராஜ். இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இதை அடுத்து அவரது பட்டியலில் கைதி 2 படம் இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. அதேசமயம் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் இயக்குவதாக கடந்த சில நாட்களாகவே பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த லோகேஷ் கனகராஜ் மீடியாக்களிடம் பேசும்போது ரஜினி படம் இயக்குவது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் அதை இல்லை என்று மறுக்காமல், அது குறித்து தயாரிப்பு நிறுவனம் தான் முறையாக அறிவிப்பார்கள். நான் அதுபற்றி எதுவும் சொல்ல முடியாது என்று கூறினார். அந்த வகையில் அவர் ரஜினிகாந்த் படத்தை இயக்குவதை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டுள்ளார்.
அடுத்ததாக ஜெய்பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் டைரக்ஷனில் நடிக்க இருக்கும் ரஜினிகாந்த், அதை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிப்பார் என தெரிகிறது.