HomeNewsKollywoodஜூன் 16ஆம் தேதி உயிர்பெறும் ராதாமோகனின் பொம்மை

ஜூன் 16ஆம் தேதி உயிர்பெறும் ராதாமோகனின் பொம்மை

தமிழ் சினிமாவில் உணர்வுப்பூர்வமான அழகியல் சார்ந்த கதைகளை படமாக இயக்கி வருபவர் இயக்குனர் ராதாமோகன். அப்படி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் இயக்க துவங்கிய படம் தான் பொம்மை. இந்த படத்தில் கதாநாயகனாக எஸ்.ஜே சூர்யா, கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். மான்ஸ்டர் படத்தில் இருந்து இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் இது.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த வருடம் ஜூன் 1ஆம் தேதி வெளியான நிலையில் தற்போது ஒரு வருடம் கழித்து மீண்டும் இதே ஜூன் ஒன்றாம் தேதி இந்தப் பட வெளியீடு கொடுத்த அறிவிப்பு வெளியாகிறது.

ஒரு வழியாக இந்த படம் வரும் ஜூன் 16ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். ஏற்கனவே மாநஸ்டர் படத்தில் எஸ்ஜே சூர்யா, ப்ரியா பவானி சங்கர் ஜோடி வெற்றி ஜோடியாக மாறியதால் இந்த பொம்மைக்கும் அவர்கள் உயிர் கொடுப்பார்கள் என நம்பலாம்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments