HomeNewsKollywoodலால் சலாம் படப்பிடிப்பில் பிஸியான சூப்பர் ஸ்டார் ரஜினி

லால் சலாம் படப்பிடிப்பில் பிஸியான சூப்பர் ஸ்டார் ரஜினி

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வந்த ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனை படக்குழுவினருடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவின. இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது.

தற்போது ஜெயிலர் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து மீண்டும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிக்க ஆரம்பித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பு முடிவடைந்து வெளியே வரும்போது தன்னை காண திரண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து திறந்தவெளி காரில் நின்றபடி கை அசைத்தவாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செல்லும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments