V4UMEDIA
HomeNewsKollywoodஇசையமைப்பாளராக இயக்குனர் மிஸ்கினின் புதிய அவதாரம்

இசையமைப்பாளராக இயக்குனர் மிஸ்கினின் புதிய அவதாரம்

சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் நுழைந்தவர் இயக்குனர் மிஸ்கின். முதல் படத்திலேயே ஒரு இயக்குனராக வெற்றி பெற்றதுடன் படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து தனது இசைஞானத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.

தொடர்ந்து அஞ்சாதே, முகமூடி, பிசாசு என அவர் இயக்கும் படங்களில் எல்லாம் பாடல்களும் பின்னணி இசையும் மிரட்டலாக இருக்கும். அந்த அளவிற்கு விசை ஞானம் கொண்ட மிஸ்கின் தற்போது டெவில் என்கிற படத்தின் மூலம் முதல் முறையாக இசையமைப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

இந்த படத்தை ஆதித்யா என்பவர் இயக்கி வருகிறார். கதாநாயகனாக விதார்த் கதாநாயகியாக பூர்ணா இருவரும் நடிக்கின்றனர். ஏற்கனவே சவரக்கத்தி என்கிற படத்தை இயக்கிய மிஸ்கினின் தம்பி ஆதித்யா தான் இந்த படத்தை இயக்குகிறார் என்பதும் தம்பியின் படத்திற்கே மிஸ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments