HomeNewsKollywoodஜென்டில்மேன்-2 இசைப்பணிகளை துவங்க தயாராகும் மரகதமணி

ஜென்டில்மேன்-2 இசைப்பணிகளை துவங்க தயாராகும் மரகதமணி

90களில் தமிழ் சினிமாவின் பிரம்மாண்டத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த படம் என்றால் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் படத்தை சொல்லலாம். இந்த படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து இருந்தார் தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமோன்.

இந்த படத்தின் மூலம் ஷங்கருக்கு ஒரு வெற்றிப்பட இயக்குனராக அறிமுகம் கிடைத்தவுடன் அப்போதுதான் வளரத் துவங்கியிருந்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் புகழை இன்னும் அதிக உயரத்திற்கு இந்தப் படம் எடுத்துச் சென்றது.

அதன்பிறகு அதேபோன்ற பிரம்மாண்டத்தில் சில படங்களை தயாரித்த கே.டி குஞ்சுமோன் பல வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் திரையுலகில் தனது பட தயாரிப்பு பணியை துவங்கியுள்ள கே.டி குஞ்சுமோன் ஜென்டில்மேன் 2 படத்தை தயாரிப்பதாக ஏற்கனவே அறிவித்தார்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக பாகுபலி பட புகழ் இசையமைப்பாளர் கீரவாணியை ஒப்பந்தம் செய்து அசத்தினார். அதேபோல கதாநாயகிகளாக நயன்தாரா சக்கரவர்த்தி, பிரியா லால் ஆகிய இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்

நானி நடிப்பில் வெளியான ஆஹா கல்யாணம் என்கிற படத்தை இயக்கிய கோகுல் கிருஷ்ணா தான் இந்த ஜென்டில்மேன் 2 படத்தை இயக்குகிறார். இவர் இயக்குனர் விஷ்ணுவர்தனிடம் இணை இயக்குனராக பல படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையை விரைவில் இந்த படத்தின் இசைப்பணிகளை மரகதமணி துவங்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் கதையைக் கேட்டு மரகதமணி ரொம்பவே உற்சாகமாகிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments