HomeNewsKollywoodஃபர்ஹானா இசையமைப்பாளரை புகழ்ந்த ஆர்ஆர்ஆர் இசையமைப்பாளர்

ஃபர்ஹானா இசையமைப்பாளரை புகழ்ந்த ஆர்ஆர்ஆர் இசையமைப்பாளர்

சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஃபர்ஹானா என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். இவர் விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் மற்றும் ஒரு நாள் கூத்து உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர்.

அதைத் தொடர்ந்து தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த டியர் காம்ரேட், பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைக்கும் அளவிற்கு மிகப்பெரிய இசையமைப்பாளராக உயர்ந்தார்.

இந்த நிலையில் தெலுங்கு திரையுலகின் சீனியர் இசையமைப்பாளரும் சமீபத்தில் ஆர்ஆர்ஆர் படத்திற்காக சிறந்த பாடலை கொடுத்ததற்காக ஆஸ்கர் விருது பெற்றவருமான இயக்குனர் இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி என்கிற மரகதமணி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும் போது தனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் என புகழ்ந்து கூறியுள்ளார்.

குறிப்பாக டியர் காம்ரேட் படத்தில் அவர் இசையில் உருவான காதலே என்கிற பாடல் தன் மனதை வெகுவாக பாதித்தது என்றும் கூறியுள்ளார். இப்படி ஒரு சீனியர் இசையமைப்பாளர் தந்தை பாராட்டி அதைக் கேட்கும் நிகழ்ந்து போன இயக்குனர் ஜஸ்டின் பிரபாகரன், “உங்களைப் போன்ற மனிதர்களிடமிருந்து இப்படி ஒரு பாராட்டு கேட்கும்போது இன்னும் உற்சாகமாக இருக்கிறது. உங்களது பாராட்டுக்களுக்கு நன்றி” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments