தமிழ் சினிமாவில் கடந்த நாற்பது வருடங்களுக்கு முன்பு பிரபலமான இயக்குநராக வலம் வந்தவர் மறைந்த இயக்குனர் டி.என் பாலு. இவர் ஓடி விளையாடு தாத்தா, மற்றும் கமல் நடித்த சங்கரளால், சட்டம் என் கையில் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர். இந்த நிலையில் தற்போது இவரது மகள் கவிதா ‘ஆதாரம்’ என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
புதுமுகங்கள் அஜித் விக்னேஷ், பூஜா சங்கர் நடிப்பில் சமூக அக்கறை கொண்ட படமாக நீதிமன்ற பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது. விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தில் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இயக்குனர் மிஷ்கின் கலந்து கொண்டு பேசும்போது, “இயக்குனர் கவிதாவின் தந்தை டி.என் பாலு அவர்களின் சங்கர்லால் படம் முதல் பல படங்களுக்கு நான் ரசிகன். அந்த படத்தின் பாதிப்பில் தான் துப்பறிவாளன் கருத்தில் விஷாலுக்கு தொப்பி வைத்தேன். தமிழ் சினிமாவில் காப்பி காப்பி என்ற குற்றச்சாட்டு வந்து கொண்டே இருக்கிறது. என் மீதும் நிறைய குற்றச்சாட்டு இருக்கிறது.
உலகம் முழுக்கவே ஆறு கதைகள் தான்.. அதுதான் திரும்பத் திரும்ப எடுக்கப்படுகிறது.. எல்லோரும் ஒரே கதையைத்தான் திரும்பத் திரும்ப எடுத்து வருகிறோம்” என்று பேசினார்.
கவிதாவின் தந்தை டி.என் பாலுவின் டைரக்சனில் பல படங்களில் நடித்த ஒய்.ஜி.மகேந்திரன் இந்த நிகழ்வில் பேசும்போது, “இந்த படத்தில் எனக்கு கொடுத்த கதாபாத்திரம் நீதிபதி. டி.என் பாலு சார் மக்களை நன்கு புரிந்து கொண்ட இயக்குனர். அவரின் வாரிசு இப்படி ஒரு படத்தை எடுப்பதில் ஆச்சரியம் இல்லை. அவருக்கு தவறு என தெரிந்த விஷயத்தை தைரியமாக சொல்ல நினைத்துள்ளார். கதை அருமையாக நகரும் இந்த படம் கண்டிப்பாக பல சர்ச்சைக்கு உள்ளாகும். ஆனாலும் அது ஒரு முயற்சி தான்.. மக்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள்” என்றார்.
இந்த படத்தில் இந்த படத்தில் இன்னொரு ஹைலைட்டான அம்சம் என்னவென்றால் படத்தின் நாயகி பூஜா சங்கர் இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.