HomeNewsKollywoodதனுஷ் பாடலுக்கு ஆஸ்கர் விருது இசையமைப்பாளர் மரகதமணி பாராட்டு

தனுஷ் பாடலுக்கு ஆஸ்கர் விருது இசையமைப்பாளர் மரகதமணி பாராட்டு

சமீபத்தில் நடைபெற்று முடிந்த 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருது பெற்றது. இந்த படத்திற்கு பிரபல இசை அமைப்பாளர் மரகதமணி இசையமைத்திருந்தார்.

இதை தொடர்ந்து இந்த படம் குறித்தும் பாடல் குறித்தும் ஆஸ்கர் விருது அனுபவம் குறித்தும் தொடர்ந்து மீடியாக்களில் தனது அனுபவங்களை பகிர்ந்து வருகிறார் மரகதமணி. அப்போது அவர் கூறும்போது தனுஷின் ஒய் திஸ் கொலவெறி பாடல் குறித்தும் சிலாகித்து கூறியுள்ளார்.

அதாவது ஒய் திஸ் கொலவெறி என்கிற பாடலின் வரிகள் மிகச் சிறப்பாகவும் எளிமையாகவும் இருந்ததாக கூறியுள்ள மரகதமணி, தனுஷ் எழுதிய அந்த பாடலைப் போலவே நாட்டு நாட்டுப் பாடலையும் இந்த படத்தின் பாடலாசிரியர் சந்திரபோஸ் எழுதி இருக்கிறார் என்று சிலாகித்துக் கூறியுள்ளார்.

தனுஷ் முதன்முதலாக எழுதி பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் மிகப்பெரிய சாதனையை செய்து பல நூற்றுக்கணக்கான மில்லியன் பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments