HomeNewsKollywoodகேம் சேஞ்சர் யார் ? ஷங்கரா ? ராம் சரணா ?

கேம் சேஞ்சர் யார் ? ஷங்கரா ? ராம் சரணா ?

சமீப காலமாக தமிழ் திரை உலகில் இருந்து சில இயக்குனர்கள் தெலுங்கு திரை உலகிற்கு படம் இயக்க சென்றாலும், இரண்டு வருடங்களுக்கு முன்பே இதற்கு வித்திட்டவர் இயக்குனர் ஷங்கர் என்று சொல்லலாம். தமிழில் அவர் கமலை வைத்து இயக்கி வந்த இந்தியன் 2 படப்பிடிப்பு சில காரணங்களால் தடைபட்டு நிற்க உடனே தெலுங்கில் ராம்சரணை வைத்து புதிய படத்தை இயக்கத் துவங்கினார் ஷங்கர்.

ராம்சரணின் 15வது படமாக உருவாகி வரும் இந்த படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி மற்றும் அஞ்சலி ஆகியோர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படம் தற்போது வரை பெயர் வைக்கப்படாமலேயே படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று ராம்சரனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்திற்கு தற்போது கேம் சேஞ்சர் என டைட்டில் வைக்கப்பட்டு அதன் மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம் விக்ரம் படத்தின் வெற்றிக்கொடுத்த உற்சாகத்தால் இந்தியன் டு படப்பிடிப்பையும் விறுவிறுப்பாக நடத்தி வருகிறார் ஷங்கர். இந்த இரண்டு படங்களுமே இந்த வருடம் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை படம் கொடுத்து வந்த சங்கருக்கு ஒரே வருடத்தில் இரண்டு படங்கள் வெளியானால் அதுவும் ஒரு உலக அதிசயம் தான்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments