V4UMEDIA
HomeNewsKollywoodமும்பையில் உத்தவ் தாக்கரே குடும்பத்தினருடன் ரஜினிகாந்த் சந்திப்பு

மும்பையில் உத்தவ் தாக்கரே குடும்பத்தினருடன் ரஜினிகாந்த் சந்திப்பு

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் தொடர்ந்து நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் அந்த படத்தில் சில நாட்கள் மட்டுமே நடிக்க வேண்டி இருக்கிறது. அதை தொடர்ந்து அவர் ஐஸ்வர்யா rajini இயக்கும்  லால் சலாம் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த இடைவெளியில் சற்று ரிலாக்ஸாக மும்பை சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அங்கே இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று ரசித்தார்.

இதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரான உத்தவ் தாக்கரே வீட்டிற்கும் சென்று அவர்கள் குடும்பத்தை சந்தித்து பேசி உள்ளார்.

அதேசமயம் இது அரசியல் குறித்த சந்திப்பு இல்லை என்றும் மும்பையில் இருந்ததால் மரியாதை நிமித்தமாக உத்தவ் தாக்கரேயை அவர் சந்தித்தார் என்றும் சொல்லப்படுகிறது.

Most Popular

Recent Comments