HomeNewsKollywoodஷங்கர் படப்பிடிப்பில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடி ராம்சரணை வரவேற்ற பிரபுதேவா

ஷங்கர் படப்பிடிப்பில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடி ராம்சரணை வரவேற்ற பிரபுதேவா

கடந்த வருடம் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் மரகதமணி இசையில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்கிற பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் கோல்டன் குலோப் விருது பெற்றது.

அதைத் தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது விழாவில் மீண்டும் அதே பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த நிகழ்வு இந்தியா முழுதும்  உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ஹைதராபாத்திற்கு திரும்பிய ராம்சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் தான் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். அப்படி படப்பிடிப்பிற்கு வருகை தந்த ராம்சரணை இயக்குனர் பிரபுதேவா மற்றும் அவரது நடன குழுவினர் அனைவரும் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடியபடி உற்சாகமாக வரவேற்றனர்.

இந்த படத்தில் பிரபுதேவா சில பாடல்களுக்கு நடனம் அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments