HomeNewsKollywoodரசிகை வரைந்த ஓவியம் ; வியந்து பாராட்டிய சமந்தா

ரசிகை வரைந்த ஓவியம் ; வியந்து பாராட்டிய சமந்தா

கதாநாயகர்களுக்கு எப்படி ரசிகர்கள் அதிக அளவில் இருக்கிறார்களோ அதுபோல ஒரு சில கதாநாயகிகளுக்கும் மிகப்பெரிய அளவில் பெண் ரசிகைகள் இருக்கவே செய்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகை சமந்தா. சொல்லப்போனால் ஒரு பக்கம் சினிமா மறுபக்கம் உடல் நல பிரச்சினை, இன்னொரு பக்கம் குடும்ப சிக்கல்கள் என அனைத்தையும் எதிர்கொண்டு ஒரு சாதனை பெண்மணி ஆகவே வலம் வரும் சமந்தா பல இளம்பெண்களுக்கு முன்மாதிரியான பெண்ணாக காட்சியளிக்கிறார்.

அந்த வகையில் சமந்தாவின் தீவிர ரசிகையான ஐஸ்வர்யா என்பவர் தற்போது சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் படத்திலிருந்து அவரது கதாபாத்திர தோற்றத்தை அழகான ஓவியமாக வரைந்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிடும்போது, “நீங்கள் ஒவ்வொரு நாளும் என்னை உற்சாகப்படுத்துகிறீர்கள். உங்களது பணிக்கான எனது சிறிய பாராட்டு தான் இது. உங்களது சாகுந்தலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்த படத்தை திரையில் பார்ப்பதற்காக என்னால் காத்திருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

இந்த ஓவியம் சமந்தாவின் பார்வைக்கு சென்றதும், “வாவ். இந்த பெண்ணிடம் ஏதோ திறமை இருக்கிறது” என்று கூறி தனது வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments