Home News Kollywood இரண்டே மாதத்தில் கௌதம் கார்த்திக்கின் கிரிமினல் படப்பிடிப்பு நிறைவு

இரண்டே மாதத்தில் கௌதம் கார்த்திக்கின் கிரிமினல் படப்பிடிப்பு நிறைவு

கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். 10 வருடங்களாக தமிழ் சினிமாவில் தாக்குப்பிடித்து நிலைத்து நின்றாலும் இன்னும் ஹிட் அல்லது மெகா ஹிட் என சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் இவருக்கு அமையவில்லை.

ஆரம்பத்தில் கதை தேர்வுகளில் கொஞ்சம் கோட்டை விட்ட கௌதம் கார்த்திக் தற்போது சினிமாவின் நாடி நரம்புகளை ஓரளவு புரிந்து கொண்டு கதையம்சம் கொண்ட நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் சிம்புவுடன் இவர் இணைந்து நடித்துள்ள பத்து தல மற்றும் ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளார் 1947 ஆகஸ்ட் 16 ஆகிய படங்கள் அடுத்தடுத்து இன்னும் ஒரு மாதத்திற்கு ரிலீஸ் ஆக இருக்கின்றன.

இதைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக் நடித்து வந்த இன்னொரு படம் தான் கிரிமினல். அறிமுக இயக்குனர் தட்சிணாமூர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும் நடித்துள்ளார்.

மதுரையை பின்னணியாக கொண்டு தீவிரமான க்ரைம் திரில்லர் கதையாக இந்த படம் உருவாகி உள்ளது இதில் சரத்குமார் காவல்துறை அதிகாரியாகவும் கௌதம் கார்த்திக் அக்யூஸ்ட் ஆகவும் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் ஜனனி, தீப்தி, ரவீணா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

கடந்த ஜனவரி 23ஆம் தேதி மதுரையில் துவங்கிய இந்த படப்பிடிப்பு இன்னும் இரண்டு மாதங்கள் முடிவதற்குள்ளாகவே மதுரை சென்னை என மொத்தம் 40 நாட்கள் பரப்பிடிப்பில் மொத்த படத்தையும் நிறைவு செய்துவிட்டனர்.

படப்பிடிப்பு தளத்தில் இதை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடியும் உள்ளனர்.. இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார்.