HomeNewsKollywoodவெங்கட்பிரபுவின் ‘கஸ்டடி’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வெங்கட்பிரபுவின் ‘கஸ்டடி’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சமீப காலமாக தமிழ் நடிகர்கள் தெலுங்கு திரையுலகில் நுழைந்து தெலுங்கு இயக்குனர்களின் டைரக்ஷனில் நடிக்கும் தங்களது ஆசையை நிறைவேற்றிக் கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தெலுங்கு இளம் நடிகரான நாகசைதன்யா தனது தந்தை நாகார்ஜுனாவுக்கு தமிழில் இருக்கும் செல்வாக்கு போல தனக்கும் ஒரு நல்ல இடத்தை உருவாக்க வேண்டும் என்கிற முனைப்பில் கஸ்டடி என்கிற நேரடி தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சரத்குமார், அரவிந்த்சாமி, பிரியாமணி, பிரேம்ஜி உளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். வரும் மே 12ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் மார்ச் 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments