HomeNewsKollywoodசேதுவுக்கு பிறகு கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் படமாக்கப்படும் கிறிஸ்டினா கதிர்வேலன்

சேதுவுக்கு பிறகு கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் படமாக்கப்படும் கிறிஸ்டினா கதிர்வேலன்

படத்தின் டைட்டிலை பார்த்ததுமே ஒரு கல்லூரி கேம்பஸ் கதை என்பதும் அதற்குள் ஒரு இந்து கிறிஸ்டியன் காதல் கதை இருக்கிறது என்பதும் எளிதாகவே யூகிக்க முடிகிறது. அதேசமயம் இந்த கதை களத்தில் சற்றே வித்தியாசம் கலந்து இந்த படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் எஸ் ஜே அலெக்ஸ் பாண்டியன். இவர் தாதா, பவுடர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விஜய்ஸ்ரீயிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் துவங்கியுள்ளது செயல்படத்திற்கு பிறகு இந்த கல்லூரியில் படப்பிடிப்பு நடத்தப்படும் தரம் இது என்பது குறிப்பிடத்தக்கது

காலங்களில் அவள் வசந்தம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிய கௌஷிக் ராம் கதாநாயகனாகவும், பிரபல யூடியூபர்களான ரவி விஜே மற்றும் புவனேஸ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கும் இப்படத்தில் சிங்கம்புலி , குக் வித் கோமாளி புகழ் சில்மிஷம் சிவா, அஜித் யுனிக், டி எஸ் ஆர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்

கிராமத்திலிருந்து கல்லூரி படிப்பிற்காக நகரத்திற்கு வரும் கதாநாயகன் சந்திக்கும் பிரச்சனைகளே படத்தின் முக்கிய கருவாக உள்ளது என்றும், அழுத்தமான சமூக கருத்துக்களை நகைச்சுவையுடன் கூறக்கூடிய படமாக இது இருக்கும் என்றும் இயக்குனர் கூறியுள்ளார்

அது மட்டுமல்ல இது ஒரு ரொமான்டிக் காமெடியாக, எதிர்பாராத பல திருப்பங்கள் நிறைந்த, உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம் என்கிற இன்னொரு திருஷ்டையும் ரசிகர்களிடம் ஏற்றியுள்ளார்

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments