HomeNewsKollywoodஜூனியர் என்டிஆர் படம் மூலம் தெலுங்கில் அடி எடுத்து வைக்கும் ஜான்வி கபூர்

ஜூனியர் என்டிஆர் படம் மூலம் தெலுங்கில் அடி எடுத்து வைக்கும் ஜான்வி கபூர்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் கதாநாயகியாக மாறி முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் ஜோடியாக இணைந்து நடித்த இவர் ஒரு கட்டத்தில் பாலிவுட் சென்று நிரந்தரமாக செட்டில் ஆகிவிட்டார்.

இவரது மறைவுக்கு பிறகு இவரது மகள் ஜான்விகபூர் தனது தாயைப் போலவே நடிப்பில் குதித்து பாலிவுட்டில் மட்டும் தொடர்ந்து கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இவரின் நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்து வருகின்றன.

இந்த நிலையில் தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தென்னிந்திய மொழிகளில் முதன்முறையாக அடி எடுத்து வைக்கிறார் ஜான்வி கபூர்.

ஜனதா கேரேஜ்’ படத்திற்கு பிறகு ’என்டிஆர் 30’ படத்தில் கொரட்டாலா சிவாவுடன் என்டிஆர் மீண்டும் இணைகிறார்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்ட ஹெலன் என்கிற படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்து மிகப்பெரிய பாராட்டுகளை ஜான்வி கபூர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments