சூப்பர்ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா டைரக்ஷன் துறைக்கு ஒன்றும் புதியவரல்ல. கடந்த 12 வருடங்களுக்கு முன்பு தனுஷ் நடித்த 3. கௌதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் லால் சலாம் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிக முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த நிலையில் ஹோலி பண்டிகை தினமான மார்ச் 7ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படப்பிடிப்பிலேயே ஹோலி பண்டிகை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

மேலும் முதல் நாள் என்று தொடர்ச்சியாக 16 மணி நேரம் படப்பிடிப்பு நடத்திய உள்ளதாகவும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

அது மட்டுமல்ல தனது தந்தைக்கு முதன்முதலாக இயக்குனர் கே பாலச்சந்தர் ரஜினிகாந்த் என பெயர் சூட்டியது இந்த ஹோலி பண்டிகை தினத்தில் தான் என்பதால் இதைவிட தனது படத்தின் படப்பிடிப்பை துவங்குவதற்கு நல்ல நாள் வேறு இருக்க முடியாது என்றும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.