துருவங்கள் பதினாறு படத்திற்கு பிறகு நடிகர் ரகுமான் கதையின் நாயகனாக நடிக்கும் படங்கள் ரசிகர்களிடம் மிகுந்த முக்கியத்துவமும் வரவேற்பும் பெற்று வருகின்றன. அந்தவகையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது ரகுமான் நடிப்பில் உருவாகியுள்ள ஆபரேஷன் அரபைமா என்கிற திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்த படத்தை முன்னாள் கப்பல் படை வீரரான பிரஸ் என்பவர் தயாரித்து இயக்கியுள்ளார் இந்த படத்தில் நாடோடிகள் அபிநயா, டினி டாம், நேகா சக்ஸேனா, ஷிகாத், பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படத்தின் இயக்குனர் பிரகாஷ் பேசும்போது பெற்றோருக்கு தெரியாமல் சினிமாவை கற்றுக் கொண்டேன். இருப்பினும், கடலோர காவற்படையில் தேர்வானேன். அதிக நாட்கள் சென்னையில் தான் இருந்தேன். கப்பல்படை, விமானப்படை, தரைப்படை என மூன்று படைத்தளங்களிலும் பணியாற்றிய அதிர்ஷ்டசாலி நான் என்று நினைக்கிறேன்.
போர்க்கப்பலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் ஆபரேஷன் அரபைமா வாகத்தான் இருக்கும். நாம், இப்படத்தை கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ் மூலம் எடுத்திருக்க முடியும். ஆனால், உண்மையான கப்பல்களை காட்டும் அழகு வராது. ஆனால், அந்த சவால்களையும் செய்துள்ளோம்.
கடலில் ஒரு காட்சியை படம் பிடிப்பது கடினம். கடல் சீற்றம், காற்று என அனைத்தையும் கணித்து படம் பிடிக்க வேண்டும். நாங்கள் அதை செய்துள்ளோம். 17 லொகேஷன்களை இப்படத்தில் காட்டியுள்ளேன். நம் நாட்டிற்கு புதியதாக அறிமுகமாகவிருக்கும் போதை பொருளின் பாதிப்பை சொல்லும் படம் தான் இது. இப்படத்தில் நாயகனுக்கு காதலிக்கவே நேரமில்லை. ஆனால், வில்லன் காதலிக்கிறார், அவருடைய தம்பி ரொமான்ஸ் செய்கிறார் என கூறினார் கேட்பதற்கு வித்தியாசமாகத்தான் இருக்கிறது படமும் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்