V4UMEDIA
HomeNewsKollywood3வது முறையாக ரிச்சர்ட்டுடன் கைகோர்த்த பகாசுரன் இயக்குனர்

3வது முறையாக ரிச்சர்ட்டுடன் கைகோர்த்த பகாசுரன் இயக்குனர்

என்ன படம் எடுக்கிறோம் என்பது முக்கியமில்லை, எப்படி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம் என்பதை துல்லியமாக தெரிந்து வைத்திருப்பவர் இயக்குனர் மோகன் ஜி. அதனால்தான் அவர் இயக்கிய முதல் படமான பழைய வண்ணாரப்பேட்டை மிகப்பெரிய வரவேற்பு பெறாத நிலையில் அடுத்ததாக அவர் இயக்கிய திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதுடன் அரசியல் அரங்கில் கூட சலசலப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து அவரது படங்களுக்கான எதிர்பார்ப்பு இயல்பாகவே உருவாகிவிட்டது. கடந்த வருடம் அவரது இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான பகாசுரன் ஆகிய படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே தான் வெளியாகின. இதில் பகாசுரன் திரைப்படம் ஓரளவு வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தனது அடுத்த படம் குறித்து அறிவிப்பை இயக்குனர் மோகன் ஜி வெளியிட்டுள்ளார். ஏற்கனவே திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த அவரது ஆதர்ச கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷி தான் இந்த படத்திளும் கதாநாயகனாக நடிக்கிறார்.

இது குறித்து காசி கங்கா ஆரத்தியில் எடுக்கப்பட்ட ரிச்சர்டின் வித்தியாசமான தோற்றம் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள இயக்குனர் மோகன் ஜி கூறும்போது, எல்லா கடவுள்களையும் வணங்குபவர் ரிஷி. அவர்தான் என்னுடைய அடுத்த படத்தின் கதாநாயகன். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments