HomeNewsKollywoodஜெயம் ரவிக்காக மீண்டும் அகிலன் படத்தில் ஒரு நெகட்டிவ் பாடல்

ஜெயம் ரவிக்காக மீண்டும் அகிலன் படத்தில் ஒரு நெகட்டிவ் பாடல்

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து இந்த வருடம் அவரது நடிப்பில் உருவாகியுள்ள அகிலன், இறைவன், சைரன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இதில் அகிலன் திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து பூலோகம் என்கிற படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் நடிக்க ஹரிஷ் உத்தமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் துறைமுகம் பின்னணியில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கிறது. தற்போது இந்த படத்தில் இருந்து துரோகம் என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது. இந்த பாடல் முழுக்க ஜெயம் ரவியின் ஆக்சன் காட்சிகளை இடம் பெற்றுள்ளன.

இதற்கு முன்னதாக ஜெயம் ரவி நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியான தனி ஒருவன் படத்தில் தீமை தான் வெல்லும் என்கிற எதிர்மறை பாடல் ஒன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல தற்போது துரோகம் பண்ணு என்கிற இந்த எதிர்மறை பாடலும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச் ஆகும் என தெரிகிறது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments