HomeNewsKollywoodதனுஷின் குரலில் ஒலிக்கும் வா வாத்தி

தனுஷின் குரலில் ஒலிக்கும் வா வாத்தி

கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தனுஷ் முதன்முதலில் தெலுங்கில் நடித்து தமிழிலும் உருவான வாத்தி திரைப்படம் வெளியானது. இரண்டு மொழிகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து தற்போது தியேட்டர்களில் நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

குறிப்பாக இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் இசையில் உருவாகியுள்ள வா வாத்தி என்கிற பாடல் ரசிகர்களின் நம்பர் ஒன் பாடலாக இடம் பிடித்துள்ளது. பட்டிதொட்டி கிராமங்களில் எல்லாம் கூட ஒலிக்கும் இந்த பாடலுக்கு அற்புதமான குரல் கொடுத்து இருந்தார் ஸ்வேதா மோகன்

இந்த பாடலை நடிகர் தனுஷே எழுதியிருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. இந்த நிலையில் இந்த பாடலுக்கு தனுஷ் பாடிய வெர்ஷன் தற்போது வெளியாகி உள்ளது. இதுவும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

படத்தில் கதாநாயகி பாடுவது போல இந்த பாடல் சிச்சுவேஷன் அமைந்திருந்ததால் தான் தனுஷ் இந்த பாடலை படத்தில் பாட முடியாமல் முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments