கடந்த 2005ல் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத்தொடர்ந்து பல வருடங்கள் கடந்த நிலையில் தற்போது ராகவா லாரன்ஸை வைத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் பி.வாசு.

லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் கதாநாயகியாக நடிக்க, லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே, ராதிகா மற்றும் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்

இந்த நிலையில் இந்த படத்தில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து நடித்தது குறித்து மஹிமா நம்பியார் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது திறமையின் மொத்த உருவமும் சிறந்த மனிதருமான லாரன்ஸ் மாஸ்டருடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியது என்ன ஒரு அற்புதமான அனுபவம்.. இந்த படம் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்.. இந்த படத்திற்காக என்னால் காத்திருக்க முடியாது.. பி வாசு சாருக்கு நன்றி” என்று ராகவா லாரன்ஸ் பற்றி புகழ்ந்து கூறியுள்ளார் மஹிமா நம்பியார்