V4UMEDIA
HomeNewsKollywoodமார்ட்டின் மூலம் மீண்டும் ஒரு என்ட்ரி கொடுக்கும் அர்ஜுனனின் மருமகன்

மார்ட்டின் மூலம் மீண்டும் ஒரு என்ட்ரி கொடுக்கும் அர்ஜுனனின் மருமகன்

கன்னட திரை உலகில் புகழ் பெற்ற நடிகராக விளங்கிய சிரஞ்சீவி சார்ஜா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மாரடைப்பால் காலமானார். அவரது தம்பி துருவா சார்ஜாவும் ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவருமே ஆக்சன் கிங் அர்ஜுனனின் நெருங்கிய உறவினர்கள். இன்னும் சொல்லப்போனால் மருமகன் முறையிலான சொந்தக்காரர்கள்.

இதற்கு முன்னதாக துருவா சார்ஜா கடந்த வருடம் கன்னடத்தில் நடித்த ‘பொகரு’ என்கிற திரைப்படம் செம திமிரு என்கிற பெயரில் தமிழில் வெளியானது. இந்த நிலையில் ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்கத்தில், ‘ஆக்சன் பிரின்ஸ்’ துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளது ‘மார்டின்’ திரைப்படம்

பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் ஆக்சன் அதகளமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, பிப்ரவரி 23 ஆம் தேதி, பெங்களூர் ஓரியன் மாலில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜீன், இயக்குநர் AP அர்ஜீன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக வைபவி சாண்டில்யா நடிக்க முக்கிய வேடங்களில் அன்வேஷி ஜெயின், சிக்கண்ணா, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், நிகிதின் தீர், நவாப் ஷா, ரோஹித் பதக் ஆகியோர் நடித்துள்ளனர்.

Most Popular

Recent Comments