HomeNewsKollywood1000 கோடி வசூலை கடந்த பதான்

1000 கோடி வசூலை கடந்த பதான்

கடந்த ஜனவரி மாதம் பாலிவுட்டில் உருவான பதான் திரைப்படம் வெளியானது. தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க, வில்லன் வேடத்தில் ஜான் ஆபிரகாம் நடித்திருந்தார். சிறப்பு தோற்றத்தில் நடிகர் சல்மான்கான் நடித்திருந்தார், சித்தார்த் ஆனந்த் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். நான்கு வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் ஷாருக்கான் படம் என்பதால் இந்த படம் துவங்கப்பட்ட நாளிலிருந்தே எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது.

அதே சமயம் இந்த படம் வெளியாவதற்கு முன்பு இந்த படத்தில் இருந்து வெளியான பேஷராங் என்கிற பாடல் மிகுந்த சர்ச்சையையும் கிளப்பியதோடு எதிர்ப்பையும் சம்பாதிப்பது அந்த பாடலில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் மற்றும் பாடல் காட்சிகளில் சர்ச்சையை தூண்டும் விதமாக தீபிகா படுகோனே அணிந்திருந்த ஆடை என சர்ச்சைக்கு ஆளான இந்த படம் மிகுந்த எதிர்ப்புகளுக்கிடையே தான் வெளியானது.

இன்னும் சொல்லப்போனால் படத்தை புறக்கணிக்கும் பிரச்சாரங்களும் நடந்தன. ஆனால் இவற்றையெல்லாம் புறந்தள்ளி வெளியான பதான் திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஆயிரம் கோடி ரூபாய் வசூல் என்கிற சாதனையை படைத்துள்ளது.

இதற்கு முன்பு பாகுபலி 2, கே ஜி எஃப் 2, தங்கல் ஆகிய படங்கள் இதேபோன்று ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்துள்ளன. அதே சமயம் ஹிந்தியில் மட்டுமே வெளியாகி உலகெங்கிலும் சேர்த்து ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்த முதல் படம் பதான் தான்.

தங்கல் படம் கூட முதன்முறை திரையிட்ட சமயத்தில் 700 கோடி ரூபாய் தான் வசூலித்தது. அதன்பிறகு சீனாவில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்ட போது 1300 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments