கடந்த 2016ல் சிபிராஜ் நடிப்பில் ஹாரர் கலந்த காமெடி படமாக வெளியானது ஜாக்சன் துரை. இந்த படத்தில் நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் சிபிராஜுடன் இணைந்து சத்யராஜும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கருணாகரன், பிந்து மாதவி உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்தை பிவி தரணிதரன் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படம் வெளியான சமயத்தில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது என்கிற அதிகாரப்பூர்வை அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முதல் பாகத்தில் இணைந்து பணியாற்றியது போலவே மீண்டும் சிபிராஜும் சத்யராஜும் இந்த படத்திலும் தொடர்கின்றனர். படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா வி என்பவர் அறிமுகம் ஆகிறார்.


இந்த படத்தில் ஏற்கனவே பணியாற்றிய அதிர்ஷ்ட குழுவினருடனும் தனது தந்தையுடனும் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி என சிபி சத்யராஜ் கூறியுள்ளார்.


அதேபோல இந்தப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சம்யுக்தா வி, “என் மீது நம்பிக்கை வைத்து என்னை இந்த படத்திற்கு ஒப்பந்தம் செய்த இக்குனருக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.