V4UMEDIA
HomeNewsKollywoodஅண்ணனின் 80வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு கௌரவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

அண்ணனின் 80வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு கௌரவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுவயதிலேயே தனது தாய் தந்தையை இழந்தவர். அதன் பிறகு அவரை வளர்த்து ஆளாக்கியதில் மிகப்பெரிய பங்கு அவரது அண்ணன் சத்திய நாராயண ராவ் கெய்க்வாட் மற்றும் அவரது அண்ணி இருவரையுமே சாரும். தனக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தனது அண்ணனையும் அன்னியையும் எங்கேயும் பெருமைப்படுத்தி பேச தயங்காதவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இப்போது வரை தனது தாய் தந்தையர் ஸ்தானத்திலேயே அவர்களை பூஜித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று பெங்களூரில் நடைபெற்ற தனது அண்ணனின் எண்பதாவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்.

அதுமட்டுமல்ல அவரது அண்ணன் மகனுக்கும் அன்றைய தினம் தான் அறுபதாவது பிறந்த நாள். இந்த இரண்டு நிகழ்வுகளையும் ஒரு சேர மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தனது அண்ணனுக்கு தங்க காசுகளால் அபிஷேகம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னை இந்த அளவு ஆளாக்கிய இந்த தங்க இதயத்திற்கு தங்க காசுகளால் காணிக்கை செலுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் கூறியுள்ளார். 

Most Popular

Recent Comments