விக்ரம் வேதா, சமீபத்தில் வெளியான மைக்கேல் உள்ளிட்ட கேங்ஸ்டர் படங்களுக்கு இசை அமைத்து தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் இயக்குனர் சாம் சி எஸ். இந்த நிலையில் ஏற்கனவே விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கிற்கு இசையமைத்து பாலிவுட் திரையுகிலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பெற்று சாம் சி எஸ் ஹிந்தியில் வெளியாக இருக்கும் தி நைட் மேனேஜர் என்கிற இணைய தொடருக்கு இசையமைத்துள்ளார்.

இதற்காக திறமை வாய்ந்த பல சர்வதேச இசை கலைஞர்களின் ஒத்துழைப்புடன் இந்த வெப் சீரியசுக்கு பின்னணி இசை அமைத்துள்ளார்
தி நைட் மேனேஜர்’ எனும் பெயரில் ஆங்கில மொழியில் உருவாகி ஹாலிவுட்டில் வெளியான தொலைக்காட்சி தொடர் ‘தி நைட் மேனேஜர்’. ஆறு அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடர் 2016 ஆம் ஆண்டில் வெளியானது. இந்த தொடர் தற்போது இதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது.

இதில் ‘பொன்னியின் செல்வன்’ புகழ் நடிகை சோபிதா துலிபாலா, பாலிவுட் நட்சத்திர நடிகர்கள் அனில் கபூர், ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரியங்கா கோஷ், ரூக் நபீல், சந்திப் மோடி ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கும் இந்த தொடர், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகிறது.