மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் உருவாகி வரும் படம் லியோ. இந்த படத்தில் கதாநாயகிகளாக திரிஷா மற்றும் பிரியா ஆனந்த் நடிக்கின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் இன்னொரு பெண் கதாபாத்திரமாக நடிகை அபிராமி வெங்கடாசலம் நடிக்கிறார். இந்த தகவலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டு தெரிவித்துள்ளார் அபிராமி.
இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் அறிமுகமானவர். அந்த சமயத்தில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராகவும் நடித்து நடிப்பு திறமையும் வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார். இதை தொடர்ந்து தற்போது விஜய்யின் படத்திலும் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. லோகேஷ் கனகராஜை பொருத்தவரை விக்ரம் படத்திலேயே ஷிவானி, மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி உள்ளிட்ட சின்னத்திரை பிரபலங்களை தனது படத்தில் பயன்படுத்தி இருந்தார். அதேபோல இந்த படத்தில் தற்போது அபிராமி வெங்கடாசலத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது