HomeNewsKollywoodமார்ச்சில் ரிலீசுக்கு தயாராகும் சொப்பன சுந்தரி

மார்ச்சில் ரிலீசுக்கு தயாராகும் சொப்பன சுந்தரி

தமிழ் சினிமாவில் வருடம் தோறும் வெளியாகும் படங்களை கவனித்துப் பார்த்தால் கடந்த இரண்டு வருடங்களில் அதிக அளவிலான படங்கள் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தான் வெளியாகி இருக்கும் என்பது நன்றாகவே தெரியும்.

அந்த வகையில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கூட அவர் நடித்த டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ஆகிய படங்கள் வெளியாகின. சமீபத்தில் கூட அவர் நடித்திருந்த ரன் பேபி ரன் திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் அவரது அடுத்த படமாக ரிலீஸுக்கு தயாராகி வருகிறது சொப்பன சுந்தரி.

கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி காமெடியால் மிகவும் பிரபலமான வார்த்தை தான் சொப்பன சுந்தரி. அதையே டைட்டிலாக பயன்படுத்தி இருப்பதால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் நகைச்சுவையுடன் படம் நகரும் என்றும் யூகிக்க முடிகிறது.

லாக்கப் என்கிற படத்தை இயக்கிய சார்லஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இதில் லட்சுமி பிரியா சந்திரமௌலி, ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், மைம்கோபி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டு தற்போது வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments