HomeNewsKollywoodபிரதமரை சந்தித்த யஷ் மற்றும் ரிஷப் ஷெட்டி

பிரதமரை சந்தித்த யஷ் மற்றும் ரிஷப் ஷெட்டி

தென்னிந்திய திரை உலகத்தைச் சேர்ந்த நான்கு மொழிகளில் கன்னட திரை உலகம் மட்டும் கதை உருவாக்கம் மற்றும் கன்னட நடிகர்களின் பங்களிப்பு என ஒரு குறுகிய வட்டத்திலேயே சுழன்று வந்தது. மேலும் மற்றும் வியாபார அளவிலும் பின்தங்கியே இருந்தது.

இந்த நிலையில் கடந்த நான்கு வருடங்களில் வெளியான கே ஜி எப் படத்தின் இரண்டு பாகங்கள், கடந்த வருடம் வெளியான காந்தாரா என தொடர் வெற்றிகளால் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை கன்னட திரை உலகின் பெருமையை பேசும்படி செய்து விட்டன. குறிப்பாக இந்த படத்தில் நடித்த நடிகர்கள் யஷ் மற்றும் ரிஷப் ஷெட்டி இருவரும் தற்போது பான் இந்திய நடிகர்களாக மாறிவிட்டனர்.

இந்த நிலையில் இவர்களுக்கும் கன்னட திரையுலகிற்கும் மேலும் கவுரவம் சேர்க்கும் விதமாக சமீபத்தில் அரசு நிகழ்வு ஒன்றுக்காக பெங்களூரு வந்த பிரதமர் நரேந்திர மோடி, யஷ், ரிஷப் ஷெட்டி, புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி, கேஜிஎப் மற்றும் காந்தாரா படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் உள்ளிட்ட சில பிரபலங்களை ராஜ் பவனில் நடந்த விருந்துக்கு அழைத்து அவர்களை கௌரவப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றன

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments