HomeNewsKollywoodபொய் பொய் பொய் ; காதலர் தினத்தில் சோக கீதம் வாசிக்கும் ஹிப் ஹாப் ஆதி

பொய் பொய் பொய் ; காதலர் தினத்தில் சோக கீதம் வாசிக்கும் ஹிப் ஹாப் ஆதி

வீடியோ ஆல்பங்கள் வெளியிட்டு இசையமைப்பாளராக மாறி பின்னர் நடிகர், இயக்குனர் என அடுத்தடுத்து தன்னை வளர்த்துக்கொண்டவர் நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக்கொண்டு தன்னுடைய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் ஆதி.

அதேசமயம் இடையில் தனிப்பட்ட பாடல் ஆல்பங்களை உருவாக்குவதற்கு சற்று இடைவெளி விட்டிருந்த ஆதி தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு பொய் பொய் பொய் என்கிற வீடியோ பாடல் ஆல்பத்தை உருவாக்கி காதலர் தினத்தில் வெளியிடுகிறார்.

ராப் வகை பாடலாக உருவாகியிருக்கும் “பொய் பொய் பொய்” எனும் இப்பாடல் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. காதலில் ஏமாற்றி செல்லும் பெண்ணின் துரோகம், வலி, ஏமாற்றம் என காதலின் துயர முகத்தை அழுத்தமான வரிகளில், பேசுகிறது இப்பாடல்.

துடிப்பான இசை, அழகான விஷுவல்களில் மனதை கொள்ளைக் கொள்ளும் அற்புதமான காதலர் தின பரிசாக இப்பாடல் அமைந்துள்ளது. ராப் பாடகராக அறிமுகமாகி, இயக்குநர் நடிகராக வளர்ந்திருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி தொடர்ந்து சுயாதீன ஆல்பம் பாடல்களையும் தொடர்ந்து உருவாக்கி வருகிறார்.

“பொய் பொய் பொய்” பாடலை தொடர்ந்து மாதாமாதம், ஒரு சுயாதீன பாடலை வெளியிடப்போவதாக குழுவினர் அறிவித்துள்ளனர்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments