V4UMEDIA
HomeNewsKollywoodஅமரர் கல்கியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை வெளியிட்ட மணிரத்னம்

அமரர் கல்கியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை வெளியிட்ட மணிரத்னம்

தமிழக அளவில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக அனைத்து மக்களின் மனதிலும் இடம் பிடித்த ஒரு நாவல் என்றால் அது அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தான். இந்த நாவலை எம்ஜிஆ,ர் கமல் உள்ளிட்டோர் எப்படியாவது படமாக்க வேண்டும் என முயற்சித்து அது நடைபெறாமல் போனது. ஆனால் இயக்குனர் மணிரத்னம் அதற்கு முயற்சி எடுத்து பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக மாற்றி இரண்டு பாகங்களாக இயக்கினார்.

இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று மிகப்பெரிய அளவில் வசூல் சாதனையும் செய்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. பொன்னியின் செல்வன் நாவலை புத்தமாக படித்தவர்களுக்கு படித்தபோது ஏற்பட்ட அதே உணர்வையும் புத்தகம் படிக்காமல் கேள்வி மட்டுமே பட்டவர்களுக்கு ஒரு புது விதமான உணர்வையும் இந்த படம் கொடுத்தது.

இந்த படம் வெளியான உருவாக ஆரம்பித்த பிறகு தான் அமர கல்கி குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் பலருக்கும் தோன்றத் துவங்கியது. அவர்களுக்கு கல்கி பற்றி, அவரது வாழ்க்கை வரலாறு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளும் விதமாக கல்கி பொன்னியின் செல்வர் என்கிற தலைப்பில் பத்திரிக்கையாளர் எஸ் சந்திரமௌலி ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.

இந்த புத்தகத்தை இயக்குனர் மணிரத்னம் வெளியிட முதல் பிரதிகளை அமரர் கல்கியின் பேத்திகளான திருமதி சீதா ரவி மற்றும் திருமதி லட்சுமி நடராஜன் இருவரும் பெற்றுக் கொண்டனர்.

கல்கி தமிழின் சிறந்த எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், கலை விமர்சகர், பாடலாசிரியர்.. இவை அனைத்துக்கும் மேலாக ஆழ்ந்த தேச பக்தர்.. சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று மூன்று முறை சிறை சென்றவர். அவரது எழுத்துக்களைப் போலவே வாழ்க்கையும் சுவாரசியமானது.

 “அமரர் கல்கியின் எழுத்துக்கள் தலைமுறைகள் தாண்டி ரசிக்கப்படுவது அவரது எழுத்தின் ஈர்ப்புக்கு சாட்சி. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் பெரும் வரவேற்பினைப் பெற்று, இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது வாழ்க்கை வரலாறு வெளியிடப்படுவது மிகவும் பொருத்தமானது” என்று புத்தகத்தை வெளியிடுகையில் இயக்குனர் மணிரத்னம் குறிப்பிட்டார். “பொன்னியின் செல்வனை எழுத்தில் படித்து, திரையில் பார்த்து ரசித்த இன்றைய இன்ஸ்டாகிராம் தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் அவரது ஆளுமையைப் பற்றி மிகவும் விறுவிறுப்பாக இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார் திருமதி.சீதா ரவி.

220 பக்கங்கள் கொண்ட “கல்கி: பொன்னியின் செல்வர்” புத்தகத்தின் விலை ரூ.225/- வெளியீடு: கலைஞன் பதிப்பகம், 9 சாரங்கபாணி தெரு, தி நகர், சென்னை 600017. தொலைபேசி: 044-28340488

Most Popular

Recent Comments