HomeNewsKollywoodமூத்த இயக்குனர் கே விஸ்வநாத் காலமானார்

மூத்த இயக்குனர் கே விஸ்வநாத் காலமானார்

கடந்த 50 வருடங்களாக தென்னிந்திய திரை உலகில் குறிப்பாக தெலுங்கில் மிகப்பெரிய இயக்குனராக, பின்னர் குணச்சித்திர நடிகராக ரசிகர்களால் அறியப்பட்டவர் இயக்குனர் கே விஸ்வநாத். 93 வயதான இவர் வயது மூப்பு காரணமாக இன்று இரவு காலமானார்.

திரையுலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களும் இவரது மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தனது இந்த 55 வருட திரையுலக பயணத்தில் ஏழு முறை நந்தி விருது, ஐந்து முறை தேசிய விருது, 11 முறை பிலிம் பெயர் விருது என பல விருதுகளை வென்றவர் கே விஸ்வநாத். திரையலகில் அவர் ஆற்றிய சேவையை பாராட்டி இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகே பால்கே விருது மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி இந்திய அரசு அவரை கௌரவித்துள்ளது.

வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்கள் வருடங்களாகவே சினிமாவிலிருந்து ஒதுங்கி ஹைதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்த நிலையில் இன்று காலமாகியுள்ளார் கே விஸ்வநாத்.

தமிழில் கமல் நடித்த சிப்பிக்குள் முத்து, சலங்கை ஒலி, பாசவலை உள்ளிட்ட படங்களால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர். அதுமட்டுமல்ல தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி படத்தில் மிகப்பெரிய குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் கே விஸ்வநாத்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்

கமல் நடித்த உத்தம வில்லன் குருதிப்புனல், முகவரி, பகவதி உள்ளிட்ட படங்களிளும் நடித்துள்ளார் கே.விஸ்வநாத்..

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments