HomeNewsKollywoodஹரிஷ் கல்யாண் நடிக்கும் எல் ஜி எம் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் எல் ஜி எம் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பல சாதனைகளை செய்த கிரிக்கெட் வீரருமான எம் எஸ் தோனி முதன்முறையாக சினிமா தயாரிப்பில் இறங்கி அதிலும் தமிழ் படம் ஒன்றை தயாரிக்கிறார். இது குறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு எல் ஜி எம் அதாவது லெட்ஸ் கெட் மேரீட் என டைட்டில் வைக்கப்பட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்குகிறார் அவரே இந்த படத்திற்கு இசையும் அமைக்கிறார்.

லவ் டுடே புகழ் இவானா இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்க யோகிபாபு, நதியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கான கருத்தாக்கத்தை தோனியின் மனைவி சாக்ஷி சிங் தோனி உருவாக்கியுள்ளார்.

நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் உள்ள ரசிகர்களிடம் அர்த்தமுள்ள கதைகள் எடுத்துச் செல்வதே தோனி என்டர்டெய்ன்மெண்ட்ஸின் நோக்கம். அந்த எண்ணத்துடன் தான் இந்த படம் தொடங்கப்பட்டுள்ளது. தோனி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நல்லக் கதைகளையும், திரைக்கதைகளையும் தேடிக்கொண்டிருக்கிறது. மேலும் பல திரைப்படங்களை தமிழில் தயாரிக்கவிருக்கிறோம். தமிழ் திரையுலகில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்கவும் விரும்புகிறோம்” என்கின்றனர் பட தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்கள்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments