V4UMEDIA
HomeNewsKollywoodஷாருக்கானின் பதான் படத்திற்கு உட்லண்ட்ஸ் தியேட்டரில் பிரம்மாண்ட கட்டவுட்

ஷாருக்கானின் பதான் படத்திற்கு உட்லண்ட்ஸ் தியேட்டரில் பிரம்மாண்ட கட்டவுட்

பாலிவுட் திரை உலகில் நம்பர் ஒன் இடத்தில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ஷாருக்கான். இந்தியில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் ஷாருக்கானுக்கு ரசிகர் கூட்டம் உண்டு. இந்த நிலையில் கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்து ஷாருக்கானின் படமான பதான் ரசிகர்களை மகிழ்விக்க ஜனவரி 25ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்தி தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது

இப்படத்தின் ட்ரைலர் மற்றும் அதனை தொடர்ந்து வெளியான பேஷரம் ரங் , ‘ஜூம் ஜோ பதான்’ ஆகிய இரண்டு பாடல்கள் சூப்பர் ஹிட்டாக மாறி இணையத்தில் கலக்கத்தையும், பிரமிப்பையும் ஏற்படுத்தியது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கிங் கான்’ ‘பாலிவுட்டின் ராஜா’ஷாரூக் கான் திரைப்படம் திரையரங்குகளுக்குத் திரும்பியதைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டின் உட்லேண்ட்ஸ் தியேட்டருக்கு வெளியே ஷாரூக் கான் ரசிகர்கள் மாபெரும் கட்அவுட் ஒன்றை வைத்து கொண்டாடுகின்றனர் .

ஏற்கனவே இப்படம் டிக்கெட் முன்பதிவில் பிரம்மாஸ்திரத்தை முந்திவிட்டது. ரிலீஸுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், விடுமுறை அல்லாத ஒரு நாள் வசூல் சாதனையில் புதிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular

Recent Comments