விஜய்சேதுபதி தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக தற்போது இந்தியில் மூன்று படங்களுக்கு குறையாமல் நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல இன்னொரு பக்கம் நல்ல கதையம்சம் கொண்ட வெப் சீரிஸ்களில் நடிக்க அழைப்பு வந்தாலும் தயங்காமல் ஒப்புக்கொள்கிறார். அந்த வகையில் பிரபல பாலிவுட் இரட்டை இயக்குனர்களான ராஜ் மற்றும் டி கே இயக்கத்தில் உருவாகியுள்ள பார்சி என்கிற வெப் சீரிஸில் கதாநாயகனாக அதிரடி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.


இந்த வெப் சீரிஸில் வில்லனாக பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் நடித்துள்ளார். கதாநாயகியாக ராசி கண்ணா நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் விஜய்சேதுபதியின் கதாபாத்திர வீடியோ ஒன்று வெளியானது


ஏமாற்றுவதில் வல்லவனாக இருக்கும் ஆர்டிஸ்ட் எனும் ஷாகித் கபூர் பாத்திரத்தை துரத்தி பிடிக்கும் மைக்கேல் எனும் காவலதிகாரி பாத்திரத்தில் தான் விஜய்சேதுபதி நடித்துள்ளார். இந்த நாட்டிலிருந்து கள்ளநோட்டுக் கும்பலை ஒழித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அதற்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கும் ஒரு காவல் அதிகாரியின் அதிரடியான வாழ்க்கையை அசத்தலாக காட்சிப்படுத்துகிறது இந்த வீடியோ காட்சிகள்.


கள்ள நோட்டு கும்பலில் பின்னால் இருக்கும் மனுசுக் (கே கே மேனன்) மற்றும் ஆர்டிஸ்ட் ( ஷாகித் கபூர் ) இருவரையும் பிடிக்க விஜய் சேதுபதியின் காவலதிகாரி பாத்திரம் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ளும் குறும்புத்தனமான நடவடிக்கைகளை நம்மால் ரசித்து மகிழாமல் இருக்கவே முடியாது.


ஆட்டம் போட வைக்கும் ஒரு அற்புதமான பின்னணி இசையோடு, கூடிய இந்த வீடியோ அவரது ரசிகர்களுக்கும் உலகமெங்குமுள்ள பார்வையாளர்களுக்கும் ஒரு அற்புதமான விருந்தாக இருக்கும்.