V4UMEDIA
HomeNewsKollywoodஇறைவன் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது

இறைவன் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் இணைந்து உருவான தனி ஒருவன் படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்கு பிறகு இணைந்திருக்கும் படம் இறைவன். வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் அஹமது இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போற்ற போஸ்டரை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார். கடந்த வருடத்தில் பொன்னியின் செல்வன் படம் மூலம் ஜெயம் ரவி ரசிகர்களிடம் விஸ்வரூப அளவில் சென்று சேர்ந்துள்ளார்.

அதேபோல நயன்தாராவும் கடந்த வருடம் தனது திரைப்படங்கள் மற்றும் திருமண வைபவம் ஆகியவற்றால் இன்னும் தனது ஸ்டார் வெளியவை அதிகரித்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில் இவர்கள் மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு இரு மடங்காக உள்ளது.

மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தின் வில்லன் ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், விஜயலட்சுமி, சார்லி, அழகம் பெருமாள், வினோத் கிஷன், பக்ஸ், படவா கோபி, பொற்கொடி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Most Popular

Recent Comments