V4UMEDIA
HomeNewsKollywoodராங்கி முதல்நாள் முதல் காட்சி பார்த்து ரசித்த திரிஷா

ராங்கி முதல்நாள் முதல் காட்சி பார்த்து ரசித்த திரிஷா

பொதுவாகவே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் நயன்தாரா, திரிஷா போன்றவர்கள் தங்களது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பெரிய அளவில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை என்கிற குறை பலருக்கும் உண்டு. நயன்தாரா கூட தனது நிறுவனம் தயாரிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் மட்டும் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார்.

திரிஷாவும் தனது மனதிற்கு பிடித்த படங்கள், தான் பணியாற்றியபோது நல்ல அனுபவம் தந்த படக்குழு என்றால் அந்த படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார்.

அந்தவகையில் இந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொண்டார் திரிஷா. அதற்கேற்றபடி அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் திரிஷாவுக்கு மிகப்பெரிய வரவேற்பும் ரசிகர்களிடம் கிடைத்தது.

இந்த நிலையில் தற்போது வருட இறுதியில் எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள ராங்கி திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படம் தயாராகி நீண்ட நாள் கழித்து வெளியாகி இருக்கிறது.

அதே சமயம் இந்த படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு உள்ளிட்ட புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார் த்ரிஷா.

அதுமட்டுமல்ல நேற்று ரசிகர்களுடன் சேர்ந்து முதல் நாள் முதல் காட்சியையும் பார்த்து ரசித்துள்ளார் திரிஷா. தனது படங்களுக்காக திரிஷா தற்போது காட்டிவரும் புரமோஷன் முயற்சிகளை முன்னணி நடிகைககள் பலரும் பின்பற்றினால் அவர்கள் நடித்துள்ள படங்களுக்கு அது மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும் என்று திரையுலகினர் பாராட்டி வருகின்றனர்.

இப்படத்தில் திரிஷா ஒரு துணிச்சல் மிகுந்த பத்திரிகை நிருபராக நடித்துள்ளார். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Most Popular

Recent Comments