V4UMEDIA
HomeNewsKollywood50 படங்களை இயக்கி இருப்பேன்.. ஆனால் முடியாமல் போனது ; தங்கர் பச்சான் ஆதங்கம்

50 படங்களை இயக்கி இருப்பேன்.. ஆனால் முடியாமல் போனது ; தங்கர் பச்சான் ஆதங்கம்

உணர்வுபூர்வமான, மண்சார்ந்த, குடும்ப உறவுகள் சார்ந்த படங்களை இயக்குவதற்கு பெயர் பெற்றவர் இயக்குனர் தங்கர் பச்சான். அழகி, சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு என அவரது படங்கள் எல்லாமே வெவ்வேறு விதமான மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை அழகாக எடுத்துச் சொன்னது.

இந்த நிலையில் தற்போது தனது மகன் விஜித் பச்சானை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் விதமாக டக்கு முக்கு திக்கு தாளம் என்கிற படத்தை இயக்கியுள்ளார் தங்கர்பச்சான். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது.

அதை தொடர்ந்து கருமேகங்கள் கலைகின்றன என்கிற படத்தை இயக்க ஆரம்பித்த தங்கர்பச்சான் அந்தப் படத்தின் படப்பிடிப்பையும் தற்போது நிறைவு செய்துவிட்டார்.

அருவி புகழ் அதிதி பாலன் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், கௌதம் மேனன் ஆகிய மூவரும் நடித்துள்ளனர். அதுமட்டுமல்ல நகைச்சுவை நடிகரான யோகி பாபு இந்தப் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் பற்றி இயக்குனர் தங்கர்பச்சான் கூறும்போது, “இந்தப்படத்தில் நடித்த அதிதி பாலன், கௌதம்மேனன், பாரதிராஜா, யோகி பாபு என இவர்கள் கதாபாத்திரங்கள் அனைத்த்திலுமே இவர்கள் நடித்தால் மட்டுமே இந்த படத்தை இயக்குவது என உறுதியாக இருந்தேன். அந்தவகையில் அவர்களே எனது படத்தில் கிடைத்தது அதிர்ஷ்டம்.

மக்கள் தரமான படங்களை அதிகம் பார்க்க விரும்பி இருந்தால், அவற்றிற்கு வரவேற்பு கொடுத்து இருந்தால் நான் இதுவரை கிட்டத்தட்ட 50 படங்களை இயக்கி இருப்பேன். ஆனால் நிலைமை அவ்வாறு இல்லை.. அதனால் இதுவரை வெறும் பத்து படங்களைத்தான் இயக்கி உள்ளேன்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Most Popular

Recent Comments