V4UMEDIA
HomeNewsKollywoodபெண் ஆட்டோ ஓட்டுனருக்கு இலவச ஆட்டோ வழங்கிய டிரைவர் ஜமுனா படக்குழு

பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு இலவச ஆட்டோ வழங்கிய டிரைவர் ஜமுனா படக்குழு

துணிச்சலான வித்தியாசமான கதைகளுக்கு முக்கியத்துவம் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில் அவர் நடித்த டிரைவர் ஜமுனா என்ற திரைப்படம் டிசம்பர் 30-ஆம் தேதி வெளியாகிறது.

இதில் கால் டாக்சி ஓட்டும் டிரைவர் ஆக நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படத்தை வத்திகுச்சி படத்தை இயக்கிய கின்ஸ்லி இயக்கியுள்ளார். ஆடுகளம் நரேன், கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் தற்போது வெளியாவதை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்களை கௌரவிக்கும் விதமாக சில பெண் ஆட்டோ ஓட்டுனர்களை அழைத்த டிரைவர் ஜமுனா படக்குழு, பெண் ஆட்டோ ஓட்டுனர் ஒருவருக்கு இலவசமாக ஆட்டோ வழங்கி உதவி செய்துள்ளது.

இந்த படத்தில் தனது தந்தை இறந்துவிட்ட நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் பார்த்து வந்த கால் டாக்சி டிரைவர் பணியை ஐஸ்வர்யா ராஜேஷ் மேற்கொள்கிறார் என்றும் எதிர்பாராதவிதமாக அவரது டாக்சியில் பயணிக்கும் கூலிப்படையினரிடம் அவர் சிக்கிக்கொண்டு பின்னர் அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதையும் பற்றி இந்த படம் உருவாகியுள்ளது.

Most Popular

Recent Comments