V4UMEDIA
HomeNewsKollywoodதியேட்டர்காரர்கள் அறிவுரையின் பேரில் டியர் டெத் ரிலீஸ் தேதியில் மாற்றம்

தியேட்டர்காரர்கள் அறிவுரையின் பேரில் டியர் டெத் ரிலீஸ் தேதியில் மாற்றம்

விஜய் டிவி தொடரில் அறிமுகமாகி கதை திரைக்கதை வசனம் இயக்கம் மற்றும் பா ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சந்தோஷ் பிரதாப். தற்போது அவர் நடித்துள்ள படம் டியர் டெத். இந்த படத்தை பிரேம்குமார் என்பவர் இயக்கியுள்ளார். ஸ்ரீதர் வெங்கடேசன் என்பவர் இந்த படத்தின் கதை திரைக்கதை வசனத்தை எழுதியுள்ளார்.

மரணம் என்பது எல்லோருக்கும் ஒரு காலகட்டத்தில் எதிர்கொள்ள வேண்டிய ஒன்று. ஆனால் மனித உயிர்களை தவிர மற்ற ஜீவராசிகள் மரணத்தை இயல்பாக எதிர்கொள்ளும்போது மனிதன் மட்டும் ஏன் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறான் என்பதையும் மரணத்தை அனைவரும் கெத்தாக எதிர்கொள்ளப் பழக வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.

சந்தோஷ் பிரதாப் மரணம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து, இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ள நான்கு கதைகளை ரசிகர்களுக்கு அழகாக கடத்திச் செல்லும் ஒரு கதாபாத்திரமாக நடித்துள்ளார்.

டிசம்பர் 30-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த படம் தற்போது ஜனவரி 5ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் மீடியமான படங்கள் என கிட்டத்தட்ட ஏழெட்டு படங்கள் வெளியாவதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஜனவரி 5ஆம் தேதிக்கு மாற்றி வைக்கச் சொல்லி தியேட்டர்காரர்கள் தரப்பிலிருந்து படக்குழுவினருக்கு ஆலோசனை சொல்லப்பட்டது. அதன்படியே இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Most Popular

Recent Comments