V4UMEDIA
HomeNewsKollywoodகாலேஜ் ரோடு வழக்கமான கல்லூரி கதை அல்ல

காலேஜ் ரோடு வழக்கமான கல்லூரி கதை அல்ல

தமிழ் சினிமாவில் அதிக அளவில் கல்லூரி சார்ந்த திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில் பல படங்கள் காதல் பற்றியும் நட்பு பற்றியும் ஒரு சில படங்கள் மட்டுமே படிப்பு குறித்தும் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக கல்லூரி கதைகளை கொண்ட படங்களின் வரவு குறைந்துள்ள நிலையில் தற்போது காலேஜ் ஈரோடு என்கிற பெயரிலேயே ஒரு திரைப்படம் உருவாகி உள்ளது.

டிசம்பர் 30ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஜெய்சிங் இயக்கியுள்ளார். கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்த லிங்கேஸ் மற்றும் ஆனந்த் நாக், மோனிகா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

வழக்கமாக கல்லூரி வாழ்க்கையில் மாணவர்கள் அனைவரும் கடந்து வரும் நட்பு, காதல் போன்றவற்றை பிரதிபலிக்கும் விதமாக இந்த படம் எடுக்கப்பட்டிருந்தாலும் அதையும் தாண்டி இந்த காலகட்டத்திற்கு தேவையான ஒரு முக்கியமான விஷயத்தையும் அழுத்தமாக சொல்லும் விதமாக இந்த படம் உருவாகியுள்ளது.

பொதுவாக மாணவர்கள் தங்களின் கல்லூரி படிப்புக்காக கல்விக்கடன் கேட்டு வங்கிகளை அணுகுகிறார்கள். ஆனால் அப்படி கடன் கேட்பவர்களுக்கு எல்லாம் வங்கி கடன் கொடுத்து விடுகிறதா ? அப்படி கடன் கொடுத்தாலும் வாங்கியவர்களை என்ன பாடு படுத்துகிறார்கள் என்பதை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி உள்ளது.

சமீபத்தில் இந்த படத்தை சென்னையில் உள்ள 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகளை அழைத்து திரையிட்டு காட்டினர். படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த மாணவர்கள் பலரும் கண்கலங்கியபடி, நாங்கள் இந்த படம் சாதாரண கல்லூரி காதல் கதையாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்த்து வந்தோம். ஆனால் படத்தைப் பார்த்த பின்பு கண்கலங்காமல் இருக்க முடியவில்லை என்று நெகிழ்வுடன் கூறினார்க.

குறிப்பாக அரசாங்கம் ஏழை மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினாலும் ஒரு சில மோசமான வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் அதன் பலன் நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது என்கிற ஆதங்கத்தையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.

அதற்கேற்றபடி இந்த படமும் முதல் பாதியில் ரசிகர்களை சிரிக்க வைக்கும் விதமாகவும் பின்பாதியில் நெகிழ வைக்கும் விதமாகவும் உருவாகி உள்ளதாக கூறியுள்ளனர்.

Most Popular

Recent Comments