20 வருடங்களுக்கு முன்பு டி ராஜேந்தர் இயக்கிய மோனிஷா என் மோனலிசா என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மும்தாஜ். அதை தொடர்ந்து சில படங்களில் கதாநாயகியாக, சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுபவராக நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.
சமீபத்தில் கூட நடிகர் பார்த்திபனிடம், இவர் தான் ஒரு முறை பெற்ற கடனை திருப்பி செலுத்திய நிகழ்வு குறித்து பார்த்திபன் வெளியிட்ட பதிவு இவர் மீதான மரியாதையை ரசிகர்களிடம் இன்னும் அதிகப்படுத்தியது.
இந்த நிலையில் சமீபத்தில் மெக்காவுக்கு புனித பயணம் மேற்கொண்ட மும்தாஜ் தற்போது அந்த பயணத்தை நல்ல விதமாக நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளார்.
வீடு திரும்பிய தன்னை தனது தாயார் அன்புடன் வரவேற்கும் புகைப்படம் ஒன்றை தற்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டு தனது இரட்டிப்பு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் மும்தாஜ்.