HomeNewsKollywoodஆர்கே சுரேஷ் மனைவிக்கு வளைகாப்பு ; பிரபலங்கள் நேரில் வாழ்த்து

ஆர்கே சுரேஷ் மனைவிக்கு வளைகாப்பு ; பிரபலங்கள் நேரில் வாழ்த்து

தமிழ் சினிமாவில் ஒரு விநியோகஸ்தராக தனது பயணத்தை துவங்கியவர் ஆர் கே சுரேஷ். பின்னர் தயாரிப்பாளராக மாறி விஜய்சேதுபதி நடித்த தர்மதுரை உள்ளிட்ட வெற்றி படங்களை தயாரித்தவர்.

இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை என்கிற படத்தில் வில்லனாக நடித்து ஒரு நடிகராகவும் மாறிய ஆர்.கே சுரேஷ் தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

கடந்த வருடம் இவருக்கும் மாதவி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் மாதவியின் வளைகாப்பு நிகழ்ச்சியை விமர்சையாக நடத்தியுள்ளார் ஆர்.கே சுரேஷ்.

இந்த நிகழ்வில் திரையரங்க பிரபலங்களான இயக்குனர் மிஷ்கின் சமீபத்தில் புது மாப்பிள்ளை ஆக மாறிய கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நேரில் கலந்து கொண்டு மாதவிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments